உயிரை மாய்த்துக் கொண்ட பிரபல கலை இயக்குநர் நிதின் தேசாய்; திரையுலகினர் வேதனை…

பாலிவுட்டின் பிரபல கலை இயக்குநர் நிதின் தேசாய் அவரது என். டி. ஸ்டுடியோவில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. லகான், ஜோதா அக்பர் போன்ற ஹிந்தி திரைப்படங்களில் கலை…

பாலிவுட்டின் பிரபல கலை இயக்குநர் நிதின் தேசாய் அவரது என். டி. ஸ்டுடியோவில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

லகான், ஜோதா அக்பர் போன்ற ஹிந்தி திரைப்படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியவர் நிதின் தேசாய். பல இந்தி, மராத்தி படங்கள், வரலாற்று த் தொடர்களில் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அவரது தற்கொலைக்கு திரையுலகினர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு வயது 58.

நிதின் தேசாய் ஜே. ஜே. கலைப் பள்ளியில் தனது பயிற்சியை முடித்தார். 1987 முதல், திரைப்படங்களுக்குக் கலை இயக்கத்தை தொடங்கினார். 2005 இல், அவர் கர்ஜத்தில் தனது என். டி. ஸ்டுடியோ அமைக்கப்பட்டது. அவர் அதே ஸ்டுடியோவில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனால் திரையுலகம் முழுவதும் சோகம் பரவியுள்ளது.

இதற்கிடையில், நிதின் தேசாய் கடந்த சில நாட்களாக நிதி பிரச்சனையில் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதனால்தான் அவர் தற்கொலை முயற்சியில் இறங்கினார் என்று கூறப்படுகிறது. மேலும், நிதின் தேசாயின் என். டி. ஸ்டுடியோவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரும் தீ விபத்து ஏற்பட்டு செட் பலத்த சேதமடைந்ததால் அவர் நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.