ரீரிலீஸ் ஆகிறது “சுப்ரமணியபுரம்”; டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரல்!

சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதனை மீண்டும் ரீலீஸ் செய்ய சசிகுமார் முடிவு செய்துள்ளார். வருடத்துக்கு 250 திரைப்படங்களுக்கு மேல் ரிலீஸானாலும் சில படங்கள் மட்டுமே அடடா என்றும் ஆஹா…

சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதனை மீண்டும் ரீலீஸ் செய்ய சசிகுமார் முடிவு செய்துள்ளார்.

வருடத்துக்கு 250 திரைப்படங்களுக்கு மேல் ரிலீஸானாலும் சில படங்கள் மட்டுமே அடடா என்றும் ஆஹா என்றும் வியக்க வைக்கும். அப்படி ஆச்சரியங்களை அள்ளி வைத்த படங்களில் ஒன்று, ’சுப்ரமணியபுரம்’!

சசிகுமார் என்ற இயக்குநரை, நடிகரை, தயாரிப்பாளரை அறிமுகப்படுத்திய படம் அது. அந்த ’சுப்ரமணியபுரம்’ படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகிவிட்டன.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தப் படமான இதில், ஜெய், சசிகுமார், சமுத்திரக்கனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு, இசை அமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் என அனைவருமே ரசிகர்களை மொத்தமாக வசப்படுத்தினார்கள்.

1980-களில் மதுரையில் லந்தாக திரியும் சில இளைஞர்களையும் உள்ளூர் அரசியல் புள்ளி, அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதையும் அதற்கிடையில் நடக்கும் உறவையும் துரோகத்தையும் அழுத்தமாக சொன்ன படம் சுப்ரமணியபுரம்.

80-களை தத்ரூபமாக காட்டிய அந்தப் படத்தின் காட்சிகளும் ஜேம்ஸ் வசந்தனின், கண்கணிரண்டால் பாடலும், ‘மரண பயத்தைக் காட்டிட்டான் பரமா’ என்பது போன்ற இயல்பான வசனங்களும் அந்த மதுரை பேச்சு வழக்கும் சுப்ரமணியபுரத்திற்கு இன்னும் உயிரூட்டி வருகின்றன. அதுதான் அந்தப் படத்தின் வெற்றிக்கும் காரணம். இந்தப் படம் வெளியாகி 15 வருடங்கள் ஆனதை அடுத்து, ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் #15YearsOfSubramaniapuram என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.

 

இந்த நிலையில் சுப்ரமணியபுரம் திரைப்படம் வந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதனை மீண்டும் ரீலீஸ் செய்ய சசிகுமார் முடிவு செய்துள்ளார். அதன்படி இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி மீண்டும் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும் இதற்கான புதிய டிரெயலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.