விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் அருகே அம்மன் கோவில்பட்டி புதூர் பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமாக பொம்மி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கே நேற்று மாலை பட்டாசு தயாரிக்கும் பணிகள் முடிந்த பிறகு மீதம் உள்ள கழிவுகளை எரிக்கும் பணியில் ஆறுமுகம், தெய்வேந்திரன், குபேந்திரன் ஆகிய 3 பேர் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
https://twitter.com/news7tamil/status/1487714768119287808
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், நாட்டார்மங்களம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் ஆறுமுகம், குபேந்திரன் ஆகியோர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு வருத்தமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். வெடிவிபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அண்மைச் செய்தி: உடல் பருமன் ஒரு ஆபத்தான நோய் என்பது உங்களுக்கு தெரியுமா?
மேலும், வெடிவிபத்தில் காயமுற்ற தெய்வேந்திரன், கணேசபாண்டி ஆகியோருக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர், பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் தெய்வேந்திரனுக்கு ஒரு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்குமாறு ஆணையிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








