நடிகர் யாஷின் “டாக்சிக்” திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் யாஷ் நடித்துள்ள டாக்சிக் திரைப்படம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.ஜி.எஃப் கதாநாயகன் நடிகர் ‘யாஷின்’ அடுத்த படமான “டாக்சிக்” ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் இயக்குநர் ‘கீது மோகந்தாஸ்’ இப்படத்தை ‘கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகை நயந்தாரா, தாரா சுதாரியா, கியாரா அத்வானி உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். சில மாதங்களுக்கு இப்படத்தின் ஆக்‌ஷன் கலந்த டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பெரும் பொருட்செலவில் உறுவாகியுள்ள இப்படம் முதலில் மார்ச் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் ஜூன் 4-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றும் வெளியாகாத்தால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் தந்தையர் தினத்தை முன்னிட்டு டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதன்படி ‘டாக்சிக்’ திரைப்படம் ம் “ஆகஸ்ட் 26-ஆம் தேதி” உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.