ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. குடும்பத்தின் நலனுக்காக உழைக்கும் தந்தையர்களின் தியாகங்களை போற்றும் இந்த நன்னாள், முதன்முதலில் 1910-ஆம் ஆண்டு அமெரிக்காவில் சோனோரா ஸ்மார்ட் டாட் என்ற பெண்ணால் தொடங்கப்பட்டது. அதன்படி, இன்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஒட்டுமொத்த குடும்பத்தை தாங்கி சுமக்கும் அடிப்படை தூணாகவும், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல், தன்னம்பிக்கை மற்றும் சமூக பொறுப்புணர்வை கற்றுத்தரும் முதல் ஆசானாகவும் விளங்கும் தந்தையர்கள் அனைவருக்கும் உலக தந்தையர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது சொந்த விருப்பங்களை விட குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக இடைவிடாது உழைத்து, குழந்தைகளின் கனவுகளை நனைவாக்குவதற்காக எண்ணற்ற தியாகங்களை சத்தமின்றி செய்துவரும் தந்தையர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், அளப்பரிய உழைப்பையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




