நிர்வாணம் வேறு…ஆபாசம் வேறு… ரெஹானா பாத்திமா வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….

ரெஹானா பாத்திமாவின் அரை நிர்வாண வீடியோ தொடர்பான வழக்கை கேரள உயர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா. இவர் 2020ம் ஆண்டு தனது அரை…

ரெஹானா பாத்திமாவின் அரை நிர்வாண வீடியோ தொடர்பான வழக்கை கேரள உயர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா. இவர் 2020ம் ஆண்டு தனது அரை நிர்வாண உடலில் அவருடைய மைனர் குழந்தை ஓவியம் தீட்டுவது போன்ற வீடியோவை யூடியூப்பில் பதிவிட்டார். இந்த வீடியோ பதிவு பெரும சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அவர் மேல் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது நிர்வாணத்தை ஆபாசத்துடன் இணைக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர். ஒரு தாய் சொந்த குழந்தை மூலம் கலை படைப்பிற்காக வண்ணம் தீட்டுவது பாலியல் செயலை தூண்டுவதாக கருது முடியாது என்றும், அவ்வாறு குற்றம்சாட்டுவது இரக்கமற்ற செயல் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வீடியோவில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்துள்ள நீதிமன்றம், ரெஹானா பாத்திமா மீதான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.