”காவாலா” வைப் -ல் இணையுங்கள்: இன்ஸ்டாகிராமில் காவலா பாடலுக்கு ரீல்ஸ் பதிவிட்ட தமன்னா!

”காவாலா” பாடலானது  ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், நடிகை தமன்னா காவலா பாடலுக்கு நடனமாடி, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஒன்றை பதிவேற்றியுள்ளார். நெல்சன் திலிப்குமார் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த்தை…

”காவாலா” பாடலானது  ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், நடிகை தமன்னா காவலா பாடலுக்கு நடனமாடி, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஒன்றை பதிவேற்றியுள்ளார்.

நெல்சன் திலிப்குமார் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் வரும்  ஆகஸ்ட் 10ஆம் தேதி  திரைக்கு வர இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் தமன்னா, சிவராஜ்குமார், ஜாக்கிஷெரப், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், விநாயகன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். ஜெய்லர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். வழக்கமாக நெல்சன் அனிரூத் கூட்டணியில் உருவாகும் பாடல்களில் வைப் – க்கு பஞ்சமே இருக்காது.

மேலும் இந்த திரைப்படத்தில் முதல் பாடல் “காவாலா” தற்போது வெளியாகி ரசிகர்கள் களிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த பாடலை அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ளார் ;ஷில்பா ராவ் பாடியுள்ளார்.

இந்த பாடலின் லிரிக்கல் வீடியோவில், வரும் ஒரு சில காட்சிகள் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் வகையில் நடனத்தை அமைத்துள்ளனர். தற்போது இந்த பாடல் யூடியூப்-ல் 1 கோடியே 20 லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

இந்நிலையில், காவாலா பாடலுக்கு நடனமாடி தமன்னா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அவரை பின்தொடரும் அவரது ரசிகர்கள் கமென்ட் – ல் இதயங்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.