ஆவின் பால் விற்பனை கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் -சீமான் கோரிக்கை

ஆவின் பால் விற்பனை கட்டணத்தை முறைப்படுத்த அமைச்சருக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.  தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் போரூரில் உள்ள…

ஆவின் பால் விற்பனை கட்டணத்தை முறைப்படுத்த அமைச்சருக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார். 

தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில்
போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பெரியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய சீமான், பெரியாரை ஆசானாக ஏற்று கொண்டோம் தலைவனாக பிரபாகரனை ஏற்று கொண்டோம். சாதி ஒழிப்பு, சமூக நீதி பற்றி யாரும் பேச மாட்டார்கள். திராவிட கோட்பாடோடு முரண்பாடு வரும்போது அதனை நீக்கி விட்டோம். பெரியார் தமிழை உணரவில்லை.  பெரியாரும் போராடினார், பெரியார் மட்டும் போராடினார் என்பதை ஏற்கவில்லை என பேசினார்.

மேலும்,  100 கோடியில் சிலையை வைத்து பெரியாரின் கருத்தியலை எப்படி கொண்டு சேர்க்க முடியும்.  அவரது எளிய வழியில் போராட வேண்டும். அரசுடமை ஆக்க விட மறுக்கிறார்கள். நான் முதல்வர் ஆனால் பெரியாரின் சிலையை தொட்டு விட முடியுமா. என்றார்.

அத்துடன், கொரோனா தொற்று அதிகரிக்கிறது நாம் கவனமாக இருந்து கொள்ள வேண்டும். நம்மை நாம் தற்காத்து கொள்ள வேண்டும்.கேவலமான வெள்ளம் கொடுத்ததால் தான் மக்கள் திட்டினார்கள்.

என் பனத்தை கொடுக்க எதற்கு அரசு ரேசன் அரிசியை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாப்பிடுவார்களா. நிரந்தர முதல்வர் என்று கூறியவர்கள் எல்லாம் எங்கு படுத்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரியும்.  ஆவின் பால் விற்பனை கட்டனத்தை முறை படுத்த வேண்டும். அதற்கு அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன் எனவும் அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.