முக்கியச் செய்திகள் இந்தியா

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிதாக 20 பேர் சேர்ப்பு?

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மத்திய அமைச்சரவை மாற்றம், வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரவையில் புதிதாக 20 பேர் சேர்த்துக்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிவசேனா, ஷிரோமணி அகாலி தள் ஆகிய கட்சிகள் வெளியேறிதை அடுத்தும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவை அடுத்தும், மத்திய அமைச்சரவையில் காலி இடங்கள் ஏற்பட்டன. தற்போது, மத்திய அமைச்சரவையில் 21 கேபினெட் அமைச்சர்கள், தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் 9 பேர், இணை அமைச்சர்கள் 23 பேர் உள்ளனர்.

இந்நிலையில், வரும் 8ம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கப்படுவதோடு, அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியுடன் உள்துறை அமித் ஷா, மற்றும் பாஜக தேசியத் தலைவர் நட்டா ஆகியோர், கடந்த பல நாட்களாக நடத்திய ஆலோசனைக்குப் பிறகு மத்திய அமைச்சரவை மாற்றி அமைப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதில், பாஜக மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, அஸ்ஸாமா முன்னாள் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால், மேற்கு வங்க எம்.பி. சாந்தனு தாகூர், ஆகியோருடன் பீகாரில் இருந்து நான்கு பேர் தேர்ந்தெடுப்படுவர், இரண்டு பேர் ஜனதா தள கட்சியில் இருந்து லோக் ஜனசக்தி கட்சியில் இருந்து ஒருவரும் பாஜகவிலிருந்து ஒருவரும் இடம் பெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் உத்தர காண்ட் முன்னாள் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ஆகியோர் சமீபத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

அதிமுகவில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு விலகல்!

Gayathri Venkatesan

“இலவசங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்ற மாட்டோம்” – டிடிவி தினகரன்

Saravana Kumar

கல்லூரி திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Saravana Kumar