அதி கனமழை தொடர்ந்து பெய்துகொண்டிருப்பதால், தமிழ்நாட்டில் 6 மாவட்டங்க ளுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதையடுத்து, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.








