குரூப்-1 தேர்வில் தேர்ச்சிபெற்று பயிற்சியை நிறைவு செய்திருந்த 41 டிஎஸ்பிக்கள் மத்திய மண்டலங்களில் பணி நியமனம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று டிஎஸ்பிக்களாக தேர்ச்சிபெற்றிருந்த 81 பேர் பயிற்சியை கடந்த மாதம் நிறைவு செய்தனர். இவர்கள் தமிழ்நாடு காவல்துறையில் நேரடியாக டிஎஸ்பிக்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி முதற்கட்டமாக 41 பேர் வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களிலும், நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் டிஎஸ்பிக்களாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பணி நியமனம் வழங்கி உத்தரவிட்டார்.
பணி வழங்கப்பட்டவர்களுக்கு சென்னை, தாம்பரம், ஆவடி மாநகர கமிஷனர் அலுவலகங்களைத் தவிர பிற மாநகர மற்றும் மாவட்டங்களில் உதவி கமிஷனர்களாகவும், டிஎஸ்பிக்களாகவும் நியமிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
– இரா.நம்பிராஜன்








