முக்கியச் செய்திகள் இந்தியா தொழில்நுட்பம்

ரியல்மியின் புதிய பட்ஜெட் செல்போன் இந்தியாவில் அறிமுகம்

ரியல்மி நிறுவனம், ’ரியல்மி C21Y’ என்ற புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், ’ரியல்மி புக் ஸ்லிம்’ என்ற லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரியல்மி நிறுவனம், இப்போது ’ரியல்மி C21Y’ என்ற செல்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த பட்ஜெட் செல்போன், சில நாட்களுக்கு முன் வியட்நாமில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்போன், பின்புறத்தில் 13 மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இதில் இருக்கிறது. இந்த போனில் 5,000mAh பேட்டரி வசதி மற்றும் விரல் ரேகை ஸ்கேனரும் உள்ளது.

யுனிசாக் T610 SoC மூலம் இயக்கப்படும் இந்த செல்போன், 6.5-இன்ச் அளவிலான ஹெச்.டி (720×1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த செல்போன், கிராஸ் ப்ளூ மற்றும் கிராஸ் பிளாக் வண்ணங்களில் கிடைக்கும். எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி 5, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும் சார்ஜ் செய்வதற்கான மைக்ரோ-யூஎஸ்பி போர்ட்டுடன் இதன் கனெக்டிவிட்டிகள் உள்ளன.

இந்த ரியல்மி C21Y போன், 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி, கூடுதலாக மெமரி கார்டை பயன்படுத்தும் ஸ்லாட் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட இந்த செல்போனின் இந்திய விலை, 8,999 ரூபாய். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.9,999-ஆக இருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

நடிகர் சூர்யாவை பகிரங்கமாக மிரட்டுவதா? மார்க்சிஸ்ட் கண்டனம்

Gayathri Venkatesan

இரண்டு நாட்களுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள ஆ.ராசாவுக்குத் தடை: தேர்தல் ஆணையம்

Halley karthi

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தாக்கல்: அதிமுக வெளிநடப்பு

Ezhilarasan