29.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

குணா குகைக்கு ரீ-விசிட் அடித்த ரியல் மஞ்சும்மல் பாய்ஸ்!

தமிழ்நாட்டில் பட்டைய கிளப்பி வரும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் உண்மை சம்பவத்தில் தொடர்புடைய கேரள குழுவினர் நேற்று கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். 

மலையாளத்தில வெளியாகி,  கேரளாவை விட தமிழ்நாட்டில வெற்றிகரமாக ஓடி வசூல் வேட்டை நடத்திக் கொண்டு இருக்கும் திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ்.  கொடைக்கானல் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம்.  படத்திற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.  பல பிரபலங்களும் இந்தப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நண்பர் குழு ஒன்று கொடைக்கானலுக்கு செல்கிறது.  அதில் ஒருவர் குணா குகையில் விழுந்து விடுகிறார்.  அவனை நண்பர்கள் குழு எப்படி மீட்டது என்பதே படத்தின் கதை. இந்தப்படத்தில் குணா படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு பாடல் இடம் பெற்று இருந்தது தமிழ் ரசிகர்களிடம் பயங்கரமாக கனெக்ட் ஆகி விட்டது.  இதனால் இப்போதும் தமிழில் மஞ்சும்மல் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர்.

இந்நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தின் உண்மை சம்பவத்தில் தொடர்புடைய கேரள குழுவினர் நேற்று கொடைக்கானலுக்கு வருகை தந்தனர்.  தனியார் யூடியூப் சேனல் மூலம் நடைபெற்ற சிறப்பு படப்பிடிப்பிற்காக அவர்கள் வந்திருந்தனர்.  குணா குகைக்குள் சென்று ஆபத்தான குழிக்குள் விழுந்த சுபாஷ் சந்திரன்,  குழிக்குள் இறங்கி அவரை காப்பாற்றிய சிஜூ டேவிட் என்ற குட்டன் ஆகியோரும் வந்திருந்தனர்.

அப்போது அவர்கள் குணாகுகை பகுதிக்கு நேரில் சென்று 2006-ஆம் ஆண்டு நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.  இதற்கிடையே அங்கு வந்த சுற்றுலாப்பயணிகள் நிஜ மஞ்சும்மல் பாய்ஸ் குழுவை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.  மேலும் அவர்ளோடு சேர்ந்து புகைப்படம், செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading