முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

இணையத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள்; படக்குழுவினர் அதிர்ச்சி!

திரையரங்குகளில் நாளை வெளியாகவுள்ள மாஸ்டர் படத்தின் முக்கிய காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொங்கல் திருவிழாவையொட்டி, விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு விஜய் படம் எதுவும் வெளியாகாததால், இந்த படத்தை காண விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், படத்தின் முக்கிய காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சிறிய சிறிய வீடியோக்களாக சுமார் ஒரு மணிநேர காட்சிகள் வெளியானதாக கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

படத்தின் காட்சிகள் லீக்கானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மாஸ்டர் படத்தில் அனைவரின் ஒன்றரை வருட உழைப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். லீக்கான காட்சிகளை இணையத்தில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்ட அவர், அதுகுறித்து தகவல் தெரிந்தால் தங்களுக்கு தெரியப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு உடல்நலக் குறைவு

Web Editor

சிபிஐயின் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

EZHILARASAN D

‘ஏராளமான மக்கள் விரோத கொள்கைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது’ – சீதாராம் யெச்சூரி

Arivazhagan Chinnasamy

Leave a Reply