உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயார்: ஓ.பன்னீர்செல்வம் 

உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம்…

உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28-ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. அதன் பின் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியதால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

இதனிடையே தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத ஒன்பது மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் பெரியகருப்பனும் உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் நேற்றிரவு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக தயார் நிலையில் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதிமுக அதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது” என்று பதிலளித்தார் ஓ.பன்னீர்செல்வம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.