RCBvsRR | ராஜஸ்தானை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றி!

ராஜஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல்20 தொடரில் இன்று(ஏப்ரல்13) ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூர் அணி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது.  ஜெய்பூரில் நடந்த இந்த போட்டியில் டாஸை வென்ற பெங்களுர் அணி டாஸை வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் ராஜஸ்தான் அணி சார்பில் தொடக்க ஆட்டகாரர்காளாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்  ஆகியோர் களமிறங்கினர். இதில் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் க்ருணால் பாண்டியாவிடம் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக வந்த ரியான் பராக் 30 ரன்களில்  யாஷ் தயாளிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.  இதனிடையே களத்தில் அதிரடி காட்டி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 75 ரன்கள் அடித்து ஹேசில்வுட்டிடம் ஆட்டமிழந்தார். இவருக்கடுத்து வந்த  துருவ் ஜீரல் 35 ரன்கள் அடித்தார். 20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்த ராஜஸ்தான் அணி  174 ரன்கள் அடித்தது.

175 ரன்களை இலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பெங்களூர் அணிக்கு தொடக்கமே சிறப்பாக அமைந்தது. அதன் படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஃபில் சால்ட் 65 ரன்கள் அடித்தார். அதே போல் விராட் கோலி 62* ரன்கள் அடித்தார். அடுத்ததாக வந்த தேவ்தத் படிக்கல் 40 ரன்கள் அடித்தார். இதன் மூலம் பெங்களூர் அணி 17.3 வது ஓவரில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.