ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வென்றது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 29 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார்.
இதையும் படியுங்கள் : உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு
இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி, எதிரணி பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இறுதியாக அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 37 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார்.







