வடசென்னையை மையமாக கொண்டு உருவாகும் “ராயன்” திரைப்படம் – கதாநாயகியாக துஷாரா விஜயன்!

தனுஷ் நடித்து இயக்கும் “ராயன்” திரைப்படத்தில் கதாநாயகியாக  துஷாரா விஜயன் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ படம் கலவையான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து நடிகர்…

தனுஷ் நடித்து இயக்கும் “ராயன்” திரைப்படத்தில் கதாநாயகியாக  துஷாரா விஜயன் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ படம் கலவையான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து நடிகர் தனுஷ் எந்த படத்தில் நடிக்கிறார், அதில் யார் இயக்குநர் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டது.

இதற்கிடையே தற்போது தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்குவதாகவும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் தனுஷுடன் விஷ்ணு விஷால், ஜெயராம் காளிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. வடசென்னையை மையமாக கொண்ட இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க உள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா மற்றும் சந்திப் கிஷான் ஆகிய இருவரும் தனுஷின் சகோதரர்களாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் தலைப்பு “ராயன்” என தனுஷ் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சென்னையின் பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக அண்மையில் கூறப்பட்டது.

ராயன் படப்பிடிப்பில் பிரபல இயக்குனரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் கலந்து கொண்டதாக  சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. “ராயன்” படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், படக்குழு ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, ராயன் படத்தின் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.