திரைப்படமாகும் #RatanTata-வின் வாழ்க்கை?

ரத்தன் டாடாவின் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க முன்வந்துள்ளதாக ஜீ ஸ்டூடியோ நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொழிலதிபர்களில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். இவரின் மறைவு அவரது…

ரத்தன் டாடாவின் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க முன்வந்துள்ளதாக ஜீ ஸ்டூடியோ நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொழிலதிபர்களில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். இவரின் மறைவு அவரது குடும்பத்தை மட்டுமின்றி உலக மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய உடல் மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் ரத்தன் டாடாவின் உடல் மும்பை ஒர்லியில் உள்ள பார்சி சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்பட்டது.

இந்த நிலையில், ரத்தன் டாடாவின் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க முன்வந்துள்ளதாக ஜீ ஸ்டூடியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜீ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததது. அப்போது, அதன் நிர்வாக செயல் இயக்குநர் புனித் கோயங்கா, ரத்தன் டாடா உலக அளவில் ஏற்படுத்திய தாக்கத்தை, வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜீ ஸ்டூடியோ நிறுவனத்தின் நிர்வாக செயல் இயக்குநர் புனித் கோயங்கா வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

“ஒரு சகாப்தத்தின் முடிவு! அவர் தனது தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவை வணிக ரீதியாக முன்னேற்றியது மட்டுமல்லாமல், சமூகத்தின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளிலும் சிறந்த முன்மாதிரியாக இருந்தார். நாடு முழுவதும் நம் அனைவருக்கும் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது.”

இவ்வாறு ஜீ ஸ்டூடியோ நிறுவனத்தின் நிர்வாக செயல் இயக்குநர் புனித் கோயங்கா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.