மாமன்னன் திரைப்படத்தின் முதல் பாடல் ராசாகண்ணு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் ‘மாமன்னன்’ படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் மாரி செல்வராஜ், அனைத்தையும் சாத்தியப்படுத்திய உதயநிதி ஸ்டாலினுக்கும், ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கும் நன்றி எனவும், பெரும் உழைப்பை கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் அன்பும் பிரியமும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ’ராசா கண்ணு’ இன்று இன்று (மே 19) மாலை 5 மணிக்கு வெளியாகும் என உதயநிதி ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அண்மையில் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு அறிவித்தனர்.
https://twitter.com/Udhaystalin/status/1659416273930047489?s=20
மேலும் அப்பதிவில் ’பசித்த மீனை தின்றவர்களின் வயிற்றில் அலையடிக்கிறது கடல்’ குறிப்பிடப்பட்டுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்பாடலை வைகைப் புயல் வடிவேலு பாடியுள்ளார்.









