ராணிப்பேட்டை; அதிமுக தேர்தல் இடப்பங்கீடு வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியின் இடப்பங்கீடு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்…

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியின் இடப்பங்கீடு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக, அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியின் இடப்பங்கீடு பட்டியலை அதிமுக துணை கொறடா சு.ரவி வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் மொத்தமுள்ள 13 இடங்களில் 12 இடங்களில் அதிமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு இடம் பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் மொத்தமுள்ள 127 இடங்களில் பாஜகவுக்கு 7 இடங்களும், புரட்சி பாரதம் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 118 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.