70-வது பிறந்தநாள் கொண்டாடிய மாமனாருக்கு 70 வகை உணவு

70-வது பிறந்தநாள் கொண்டாடிய மாமனாருக்கு, 70 வகையான உணவுகளை அளித்து மருமகள் இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைக் கடை நடத்தி வருபவர் கணேசன். 70வது பிறந்தநாள்…

70-வது பிறந்தநாள் கொண்டாடிய மாமனாருக்கு, 70 வகையான உணவுகளை அளித்து மருமகள் இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைக் கடை நடத்தி வருபவர் கணேசன். 70வது பிறந்தநாள் கொண்டாடிய அவருக்கு சிறப்பு விருந்து அளிக்க, கணேசனின் மருமகளும், அவரது குடும்பத்தினரும் முடிவு செய்தனர். இதற்கான, 70 வகையான சைவ உணவுகளை தயார் செய்து கணேசனுக்கு கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தனர். வயதானவர்களுக்கு உணவளிக்காமல், அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பவர்களுக்கு மத்தியில், மாமனாருக்கு, மருமகள் அளித்த உபசரிப்பு கண்டு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.