ராமர் கோயில் பிரதிஷ்டை விழா – டெல்லியில் அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு..!

அயோத்தி ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி நடைபெறும் சிலை பிரதிஷ்டை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது.…

அயோத்தி ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி நடைபெறும் சிலை பிரதிஷ்டை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், ராமருக்கான கோயிலை கட்ட கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரம்மாண்டமாக ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் வரும் 22-ம் தேதி குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.

இதையும் படியுங்கள் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பிரதமர் மோடி!

ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்,  கோயில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி நடைபெறும் சிலை பிரதிஷ்டை நாளில், டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.