நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு? சகோதரர் பேட்டி!

நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல, எப்போதும் எந்த தேர்தலிலும் யாருக்கும் நடிகர் ரஜினியின் ஆதரவு கிடையாது என அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார். சந்திராயன் 3 செயற்கைகோள் வெற்றிகரகமாக நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோ…

நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல, எப்போதும் எந்த தேர்தலிலும் யாருக்கும் நடிகர் ரஜினியின் ஆதரவு கிடையாது என அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

சந்திராயன் 3 செயற்கைகோள் வெற்றிகரகமாக நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோ நிறுவனம் தரையிரக்கி ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. சந்திராயன் 3 திட்டத்தின் இயக்குநராக உள்ள விழுப்புரத்தை பூர்வீகமாக கொண்ட வீரமுத்துவேலுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் விழுப்புரம் திரு.வி.க. வீதியில் அவரது இல்லத்தில் வீரமுத்துவேலின் தந்தை பழனிவேலை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தென் துருவத்தில் சந்திராயன் 3 தரையிரங்கி சாதனை படைத்ததற்கு வீரமுத்துவேலின் தந்தை பழனிவேலை நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்ய நாராயண ராவ் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த சத்யநாராயண ராவ் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக வீரமுத்துவேல் செயல்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ரஜினியின் சகோதரர் ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாகவும் திரையரங்குகளில் இன்றும் கூட்டம் அதிகரித்து காணப்படுவதாக தெரிவித்தார்.உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ரஜினி ஆசிர்வாதம் பெற்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த சத்யநாராயண ராவ் ரஜினிக்கும் யோகி ஆதித்யநாத் ஆகிய இருவருக்கும் பல வருடங்களாக பழக்கம் உள்ளதால் மடங்களுக்கு செல்வது, பாபாவை தரிசனம் செய்வது இமயமலை செல்வது போன்ற வழக்கை ரஜினி வைத்துள்ளார். அதனடிப்படையில் தான் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்து ஆசிர்வாதம் பெற்றதாக கூறினார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை எனவும் தேர்தலில் இப்போதும் எப்போதும் யாருக்கும் ரஜினியின் ஆதரவு இல்லை எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.