ரஜினி VS சூர்யா | ஆயுத பூஜைக்கு வேட்டையன், கங்குவா வெளியீடு!

வேட்டையன் படத்தோடு சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகப்போகிறது என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.   ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.…

வேட்டையன் படத்தோடு சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகப்போகிறது என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.  

ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் ராணா, மஞ்சு வாரியர், அமிதாப்பச்சன், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார்.

ஜெய் பீம் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வேட்டையன் திரைப்படம் அதைவிட ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று சூர்யா வித்தியாசமான தோற்றத்தில் சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை 3டி முறையில் படக்குழுவினர் தயாரித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வேட்டையன் திரைப்படம் ஆயுத பூஜையையொட்டி அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என முன்னரே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதே நாளில் களம் இறங்கப் போவதாக கங்குவா பட குழு அறிவித்துள்ளது. இரு படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதால் அக்டோபர் 10 ஆம் தேதியை சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். தங்குவா திரைப்படம் முன்னரே வெளியாக இருந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு கடைசியாக அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய மொழிகள் உட்பட சுமார் 10 மொழிகளில் கங்குவா படத்தை வெளியிட பட குழு திட்டமிட்டுள்ளது. சூப்பர் ஸ்டாரின் படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அதே நாளில் கங்குவா படத்தை வெளியிடும் சூர்யா மற்றும் படக்குழுவினரின் தைரியத்தை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.

2021 இல் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4 ஆம் தேதி வெளியான போது, சூர்யாவின் ஜெய்பீம் ஓடிடியில் நவம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.