பாலிவுட்டில் மீண்டும் ரஜினிகாந்த்?…வெளியான புதிய தகவல்!

சஜித் நந்திவாலா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் பாலிவுட்டில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘லால் சலாம்’ . இத்திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார்.  இத்திரைப்படம்…

சஜித் நந்திவாலா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் பாலிவுட்டில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘லால் சலாம்’ . இத்திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார்.  இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.  இந்நிலையில், ‘தலைவர் 170’ படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்கி வருகிறார்.  இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது . ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து,  ரஜினியின் ‘தலைவர் 171’ படத்தை லோகேஷ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.  ஆனால், லோகேஷ் இயக்கும் படத்தில் ரஜினியுடன் தானும் நடிப்பதாக இயக்குநர் மிஷ்கின் நேர்காணல் ஒன்றில் கூறி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.  இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநரும்,  தயாரிப்பாளருமான சஜித் நந்திவாலா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒரு படத்திற்காக பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலாவுடன் ரஜினிகாந்த் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா இதனை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து ரஜினியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.