ஐபிஎல் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதுடைய வீரரான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்திற்கு வாங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த 2025 ஐபிஎல் மகா ஏலம், சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக 577 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். நாளையும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ஏலத்தொகை மற்றும் 6 ஆர்டிஎம் கார்டு ஆப்சன்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியை கட்டமைக்கும் முயற்சியில் வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ரிஷப் பந்த் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவர் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
அஸ்வின், கே.எல்.ராகுல், நட்ராஜன், ஜடேஜா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் நேற்று ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது நாளாக ஏலம் தொடர்ந்தது. இந்த நிலையில் ஐ.பி.எல். வரலாற்றிலே மிக குறைந்த வயதில் ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருந்த வைபவ் சூர்யவன்ஷியை (வயது 13) ரூ. 1.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ளது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதேபோல உள்ளூர் வீரரான அன்ஷுல் கம்போஜை ஏலத்தில் எடுக்க சென்னை – மும்பை அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவின. இறுதியில் சென்னை அணி ரூ. 3.40 கோடிக்கு அவரை ஏலத்தில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.







