ராஜஸ்தான்; பாஜக முன்னாள் அமைச்சர் அமின் பதான் காங்கிரஸில் இணைந்தார்…

ராஜஸ்தான் மாநில பாஜக முன்னாள் அமைச்சர் அமின் பதான், காங்கிரஸில் இணைந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23 ஆம் தேதி  சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், …

ராஜஸ்தான் மாநில பாஜக முன்னாள் அமைச்சர் அமின் பதான், காங்கிரஸில் இணைந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23 ஆம் தேதி  சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  அங்கு பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என முதலமைச்சர் அசோக் கெலாட் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில் ராஜஸ்தான் மாநில பாஜக முன்னாள் அமைச்சர் அமின் பதான், காங்கிரஸில் இணைந்தார். கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் மாநில முதல்வருமான அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா முன்னிலையில், அமின் பதான் காங்கிரஸில் இணைந்தார்.

இதையும் படியுங்கள்:சென்னை: சாகித்ய அகாதெமியில் புத்தக் கண்காட்சி தொடக்கம்!!

அமின் பதான் முன்னதாக,  ராஜஸ்தான் மாநில சிறுபான்மை மோர்ச்சா மற்றும் மாநில ஹஜ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.