நட்பைப் போற்றும் ‘RRR’ படத்தின் பாடல்

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘RRR’ படத்தில் இருந்து ‘நட்பு’ என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  பாகுபலி இயக்குநர் ராஜமௌலி இயக்கி வரும் ‘RRR’ படம் பிரமாண்ட பொருட்செலவில் தயாராகியுள்ளது. இந்த படத்தில் தெலுங்கு…

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘RRR’ படத்தில் இருந்து ‘நட்பு’ என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

பாகுபலி இயக்குநர் ராஜமௌலி இயக்கி வரும் ‘RRR’ படம் பிரமாண்ட பொருட்செலவில் தயாராகியுள்ளது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், பாலிவுட் நடிகை ஆலியா பாட், நடிகர் அஜய் தேவ்கன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி, இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

நட்பை மையமாகக் கொண்ட திரைப்படம் என்பதால், நண்பர்கள் தினமான இன்று, நட்பைப் போற்றும் வகையில் பாடல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழில் நட்பு என்ற பெயரிலும், மலையாளத்தில் பிரியம் என்ற பெயரிலும், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தோஸ்தி என்ற பெயரிலும் இந்த பாடல் வெளியாகியுள்ளது.

https://twitter.com/RRRMovie/status/1421704787804917761

தெலுங்கு பாடலை ஹேமச்சந்திரா, கன்னடத்தில் யாசின் நிசார், மலையாளத்தில் விஜய் யேசுதாஸ், ஹிந்தியில் அமித் திரிவேதி ஆகியோர் பாடியுள்ளார். தமிழ்ப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.

இசையமைப்பாளர் கீரவாணியுடன் ஒவ்வொரு மொழியில் பாடலைப் பாடும் பிரபலங்கள், நடனக் குழுவினருடன் பிரமாண்டமாக இந்த பாடல் உருவாகியுள்ளது. அரங்கின் பின்னணியின் இணைந்த கைகள், நட்பைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல், வெளியான சில மணி நேரங்களிலேயே 2 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.