#RainAlert | 12 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை… எங்கெல்லாம் தெரியுமா?

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளுக்கு அருகே தென்கிழக்கு அரபிக்கடலில்…

#RainAlert | Rain is expected in 12 districts... Do you know where?

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளுக்கு அருகே தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதையும் படியுங்கள் : புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை – இன்றைய விலை நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்து. பொங்கல் பண்டிகையான நாளை நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

#WeatherUpdate | Where is there a chance of rain till 10 pm?

அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதிகளிலும் மாலை 5 மணி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.