அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தை குளிர்விக்க வருகிறது மழை… வானிலை மையம் சொன்ன குட்நியூஸ்!

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.   தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் தொடர்ந்து சில நாட்களாக அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின்…

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் தொடர்ந்து சில நாட்களாக அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு பகுதி நிலவி வருகிறது.

அதன் காரணமாக இன்று  தமிழகத்தில் ஒரு சில இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி,  தஞ்சை, நெல்லை, திருவாரூர், கன்னியாகுமரி, நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் எனவும்
சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.