Rain Alert | 13 மாவட்டங்களில் இரவு 9 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று இரவு 9 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதேபோல், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை கொட்டி தீர்த்து வருகிறது. இருப்பினும் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது. சென்னையை பற்றி சொல்ல தேவையே இல்லை. அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று இரவு 9 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

தஞ்சாவூர்
திருவாரூர்
புதுக்கோட்டை

லேசான மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

நீலகிரி
தேனி
தென்காசி
திண்டுக்கல்
திருச்சி
நாகப்பட்டினம்
கடலூர்
திருவள்ளூர்
செங்கல்பட்டு
கோயம்புத்தூர்
புதுச்சேரி
காரைக்கால்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.