முக்கியச் செய்திகள் தமிழகம்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

திமுக ஆட்சி பொறுப்பேற்றப்பின் கந்தசாமி லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அதன்பின் ஊழல் புகார்களுக்கு உள்ளான முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர். சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான புதுக்கோட்டை வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் சோதனை தொடர்கிறது.

 

லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில், 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது 6 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2021 மார்ச் 31ஆம் தேதி வரை வருமானத்திற்கு அதிகமாக சி.விஜயபாஸ்கர் 51 கோடியே 35 லட்சம் மதிப்பிலான சொத்துகளை சேர்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவரது மனைவி ரம்யாவும் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சம் மதிப்பிலான சொத்துகளை குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு, கொரோனா தடுப்பூசி வழங்க அனுமதி..

Saravana

தவறவிட்ட கேட்ச், விளாசிய நெட்டிசன்ஸ்.. மன்னிப்புக் கேட்டார் ஹசன் அலி!

Halley karthi

டி-20 உலகக் கோப்பை யாருக்கு? முதல் முறையாக ஆஸி. நியூசி: ‘டாஸ்’தான் தல!

Halley karthi