முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு&காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு

ஜம்மு&காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு&காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்புத்துறையினர் மற்றும் ஜம்மு&காஷ்மீர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பீகாரை சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக இந்த மாதத்தில் மட்டும் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதில், காஷ்மீர் பண்டிட் சமூகத்தின் முக்கிய உறுப்பினரும், ஸ்ரீநகரில் ஒரு மருந்தகத்தின் உரிமையாளருமான மகான் லால் பிந்த்ரூ, டாக்ஸி டிரைவர் முகமது ஷாஃபி லோன், ஆசிரியர்கள் தீபக் சந்த் மற்றும் சுப்புந்தர் கவுர் மற்றும் உணவு விற்பனையாளர் வீரேந்தர் பாஸ்வான் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

முன்னதாக ஜம்மு&காஷ்மீர் முழுவதும் 900பேரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 13 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

பட்ஜெட் ஒரு டிஜிட்டல் ‘டிமிக்கி’: ஜெயக்குமார்

Saravana Kumar

எல்லையில் சீனாவின் புதிய கட்டுமானங்கள்!

Halley karthi

மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது: அனைத்திந்திய விவசாய சபை அறிவிப்பு!

Saravana