ரெய்டில் எந்த உள்நோக்கமும் இல்லை; அமைச்சர் ராஜகண்ணப்பன்

அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெறும் சோதனைகளில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.   அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீர்…

அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெறும் சோதனைகளில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

 

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, தருமபுரி, சேலம், தெலங்கானா மாநிலம் கரீம் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை இன்று காலை முதல் நடைபெற்று நடந்து முடிந்தது. முடிவில் அவருக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ.2.65 கோடி கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னதாக மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பொங்கல் சிறப்பு பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்று தெரிவித்தார்.. பெரும்பாலான பேருந்துகள் கூட்டமின்றி சென்றதாகவும் அவர் விளக்கமளித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெறும் சோதனைக்கு எந்தவித உள்நோக்கமும் கிடையாது என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.