“பாலங்களை கட்டுங்கள், தடுப்புகளை அல்ல!” -ராகுல்

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்த விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராகவும், மேலும் அதிக அளவில் டெல்லியில் விவசாயிகள் திரள்வதை தடுக்கவும் காவல் துறையினர் முள் வேலிகளை கொண்டும், இரும்பு முட்கம்பிகளை சாலைகளில் புதைத்தும் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.…

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்த விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராகவும், மேலும் அதிக அளவில் டெல்லியில் விவசாயிகள் திரள்வதை தடுக்கவும் காவல் துறையினர் முள் வேலிகளை கொண்டும், இரும்பு முட்கம்பிகளை சாலைகளில் புதைத்தும் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசின் இந்த அடக்குமுறையை எதிர்த்து, காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ள தடுப்புகளின் புகைப்படங்களை ராகுல் காந்தி டிவிட் செய்து, “பாலங்களை கட்டுங்கள், தடுப்புகளை அல்ல!” என குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தினுடனான காஜிபூர்-மீரட் நெடுஞ்சாலை முள் வேலிகளும், நான்கடுக்கு இரும்பு தடுப்புகளை கொண்டும் முடக்கப்பட்டுள்ளது. அதே போல டெல்லி-ஹரியானா எல்லையிலும், காவல்துறையினர் கைகளில் இரும்பு கம்பிகளை ஏந்தியவாறு பாதுகாப்பு பாணியில் ஈடுபட்டிருந்தது சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதே நெடுஞ்சாலையில் மற்றொரு பகுதியில் தற்காலிக சிமென்டினை கொண்டு தடுப்புச் சுவர்களை காவல்துறை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியை தொடர்ந்து பிரியங்கா காந்தியும் விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ள தடைகளின் வீடியோக்களை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply