”ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை கொண்டு வர பாஜக முயல்கிறது”- ராகுல்காந்தி!

நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களின் வேலைக்காரர்களாக, விவசாயிகளை மாற்ற பிரதமர் மோடி முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார்.…

நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களின் வேலைக்காரர்களாக, விவசாயிகளை மாற்ற பிரதமர் மோடி முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அவர் 3 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இன்று கோவை வந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையம் தொடங்கி வழிநெடுகிலும் அவருக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, நாடு முழுவதும் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று கொண்டு வர நினைக்கிற பாஜக அரசின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் போராடிக் கொண்டிருப்பதாகக் கூறினார். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பிரதமர் மோடி மதிப்பதில்லை என்று குற்றஞ்சாட்டிய ராகுல்காந்தி, தமிழக மக்களை இரண்டாம்தர குடிமக்களாக மோடி கருதுவதாகவும் விமர்சித்தார். புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபர்களின் வேலைக்காரர்களாக விவசாயிகளை மாற்ற பிரதமர் மோடி முயல்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply