இந்திய ஒற்றுமைப் பயணத்தை செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கும் ராகுல் காந்தி, 150 நாட்களும் கண்டெய்னர் வாகனத்தில் தங்கவுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது தெரிவித்துள்ளார்.
சென்னை இராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, இந்திய ஒற்றுமைப் பயணத்தை செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கும் ராகுல் காந்தி, 150 நாட்களில் 3,500 கிமீ நடைப்பயணம் மேற்கொள்வதாகவும், மாலை வேளைகளில் மக்களுடன் உரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நடைப்பயணத்தில் பங்கேற்க கட்சிகள், மக்கள் இயக்கங்கள், அமைப்புகளையும் அழைப்பதாகவும், காங்கிரஸ் தொண்டர்கள், பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களுடன் 100 பேர் ராகுல்காந்தியுடன் தொடர் நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார். நடைபயணத்தின் போது கண்டெய்னர் வாகனத்தில் ராகுல்காந்தி தங்கவுள்ளதாகவும், 3,500 கிமீ நடைப்பயணத்தில் தொடர்ந்து ராகுல்காந்தியுடன் பங்கேற்பவர்கள் உடல் பரிசோதனை மேற்கொண்ட பிறகே அனுமதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
-ம.பவித்ரா