காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது லடாக் பயணத்தின் போது திராஸில் உள்ள கார்கில் போர் நினைவிடத்திற்குச் சென்று வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக, கார்கில் பேரணியில் ராகுல் காந்தி பேசினார். லடாக்கி மக்களின் நிலத்தை அபகரித்து அதானி குழுமத்திற்கு வழங்க விரும்புவதாகக் கூறி பாஜக மீது குற்றம்சாட்டினார். அதன் காரணமாக லடாக் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கவில்லை என்றும் விமர்சித்தார்.
லடாக்கை ஒரு அங்குலம் கூட சீனா எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி கூட்டத்தில் பிரதமர் கூறியது வருத்தமளிக்கிறது. ஆனால் இது பொய் என தெரிவித்தார்.
பாரத் ஜோடோ யாத்ராவின் போது பனிப்பொழிவு காரணமாக என்னால் லடாக்கிற்குச் வர முடியவில்லை. லடாக்கில் யாத்திரையை நடத்த வேண்டும் என்று என் மனதில் இருந்ததால் இந்த முறை மோட்டார் சைக்கிளில் சென்றேன் என ராகுல் காந்தி தெரிவித்தார்.







