பொங்கல் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் தனித்தன்மை வாய்ந்த பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், இந்த…

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் தனித்தன்மை வாய்ந்த பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், இந்த பண்டிகை நாட்டின் பல பகுதிகளில், மகரசங்கராந்தி, லோரி, பிகு என பல பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த பண்டிகை, அன்பு, நல்லிணக்கம், வளர்ச்சி, மகிழ்ச்சி ஆகியவற்றை நமது சமூகத்தில் செழிக்கச் செய்யட்டும் என்று தெரிவித்துள்ளார். வெங்கைய்யா நாயுடு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த திருவிழா, வண்ணமயமானது என்றும், நல்ல அறுவடையையும், இயற்கையின் அருளையும் குறிக்கக் கூடியது என்றும் தெரிவித்துள்ளார். உலகின் மகிழ்ச்சிக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் இந்த நாளில் பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply