லண்டனுக்குப் பறந்த ராகுல்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், ‘இந்தியா 75: நவீன இந்தியாவின் முன் உள்ள சவால்களும் வாய்ப்புகளும்’ என்ற கருத்தரங்கு நாளை நடைபெற…

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், ‘இந்தியா 75: நவீன இந்தியாவின் முன் உள்ள சவால்களும் வாய்ப்புகளும்’ என்ற கருத்தரங்கு நாளை நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்த கருத்தரங்கில், இந்தியா குறித்த சிந்தனைகள் என்ற தலைப்பில் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளதாகவும், அதோடு, இந்தியாவின் இன்றைய மற்றும் எதிர்கால நிலை என்ற பொருளில், லண்டனில் உள்ள இந்தியர்களுடன் கலந்துரையாட உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

இதேகருத்தரங்கில், காங்கிரசின் மற்றொரு மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தும், பிரியாங் காட்ஜ்-ம் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை தவிர்த்து வந்த ராகுல் காந்தி, கொரோனாவுக்குப் பிறகு முதன்முறையாக வெளிநாடு சென்றுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.