ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றியடைய கோயிலில் ராகவா லாரன்ஸ் சிறப்பு பிரார்த்தனை!

ஜிகர்தண்டா  திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர்  ராகவா லாரன்ஸ், தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். தீபாவளி பண்டிகையொட்டி  ஜிகர்தண்டா திரைப்படம் தமிழ் , தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி…

ஜிகர்தண்டா  திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர்  ராகவா லாரன்ஸ், தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

தீபாவளி பண்டிகையொட்டி  ஜிகர்தண்டா திரைப்படம் தமிழ் , தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட  பல மொழிகளில்  வெளியாகி உள்ளது.  ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த ஜிகர்தண்டா திரைப்படம்,  வெற்றி பெற நடிகர் ராகவா லாரன்ஸ் திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.  அதைத்தொடர்ந்து கோயிலில் உள்ள அனுஷம் நட்சத்திர லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   தான் பிறந்து வளர்ந்த வடசென்னை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் சாமி கும்பிட வந்ததாகவும்,  திருவொற்றியூருக்கு வரும்போது தன்னுடைய பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைப்பதாகவும் கூறினார்.  மேலும் வெளியாகியுள்ள ஜிகர்தண்டா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த நடிகர் லாரன்ஸை ரசிகர்கள் சுற்றி வளைத்து
புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.