அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ரோஜர் பெடரரை அடுத்து ரபேல் நடாலும் விலகியுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி வீரர் ரபேல் நடால் விலகி இருக்கிறார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகிக் கொள்வதாக அவர் அறிவித் துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து ட்விட்டரில் அவர், “காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு வருடமாக அவதிப்பட்டுகிறேன். இதற்குத் தீர்வு காண எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது. இதனால் துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுகிறேன்’ என அறிவித்துள்ளார்.
இந்த தொடரில் இருந்து, ரோஜர் பெடரர் ஏற்கனவே விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், இப்போது ரபேல் நடாலும் விலகுவதாக அறிவித்திருப்பது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி, வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.