தனியார் பல்கலைக்கழகதிற்கு சொந்தமான மாணவர்கள் தங்கும் விடுதியில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து வனத்தில் விட்டனர்.
கன்னியாகுமரி, தக்கலை அருகே தனியார் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. அங்கு குழாயில் தண்ணீர் வராததால் விடுதியின் நிர்வாக அதிகாரி தண்ணீர் தொட்டியை திறந்து உள்ளே பார்த்துள்ளார்.
அப்போது துணி ஏதோ மாட்டிக் கொண்டிருப்பது போல அவருக்கு தென்பட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, அவர் அதை இழுத்து வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அது திடீரென அசைவது போல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.
உடனே அங்கு நின்றிருந்த மாணவர்கள் அருகே சென்று தண்ணீர் தொட்டியில் பார்த்த போது அதில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கிடப்பது போல் தெரிய வந்தது. அதை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பாம்பை கைப்பற்றி எடுத்து சென்றனர். இதனால் கல்லூரி விடுதியில் மாணவர்களிடையே சிறிது நேரம் அச்சத்தை ஏற்படுத்தியது.
ம. ஶ்ரீ மரகதம்








