நடிகர் விஜய்யின் The Greatest Of All Time படத்தின் புது அப்டேட்டை இன்று மதியம் 1 மணிக்கு அறிவிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்படத்தில் த்ரிஷா கேமியோ ரோலில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘The Greatest of All Time’ திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாகி வருவதாகவும், அதில் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் விஜய் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Nanbas and nanbis ready a??#TheGreatestOfAllTimeuUpdate at 1:05pm IST today!! #TheGOAT #Thalapathy #aVPhero https://t.co/TROc9OfKuX
— venkat prabhu (@vp_offl) April 11, 2024
தென்னாப்பிரிக்கா, பேங்காக் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கேரளாவிலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று படத்தின் வெளியீட்டு தேதியை மதியம் ஒரு மணிக்கு அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தனது எக்ஸ் தள பக்கத்தில் இன்று மதியம் 1.5 மணிக்கு ஒரு படத்தின் புது அப்டேட்டை கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். அது படத்தின் ரிலீஸ் தேதியாகத்தான் இருக்கும் என நண்பா, நண்பீஸ் ஆர்வமுடன் உள்ளனர்.