நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று வெளியாக உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான ‘அயலான்’ திரைப்படம் ரூ.90 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றிப் படமாக அமைந்தது. மேலும், ‘அயலான்’ திரைப்படம் ஓடிடியில் வெளியான பின்னர் ரசிகர்களிடம் கூடுதல் வரவேற்பை பெற்றது. அயலானின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 21வது படம் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இப்படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
https://twitter.com/SKProdOffl/status/1778022634615119877
அமரனைத் தொடர்ந்து இயக்குநர் முருகதாஸுடன் நடிகர் சிவகார்த்திகேயன் கைக்கோர்த்துள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் குறித்து அவரின் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பள்ளிக்கூடம், கோயில் ஆகியவை அடங்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.







