உலகப்பிரசத்தி பெற்ற பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரை இனறு தொடங்க உள்ள நிலையில், அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை இன்று தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. முதல் நாளான இன்று, மூலவர்களான ஜெகன்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்ரா 3 ரதங்களில், தனித்தனியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஜெகநாதர் கோயிலில் இருந்து புறப்படும் தேர், 2 கி.மீ. தொலைவில் உள்ள மவுசிமா கோயிலை சென்று அடையும்..
விழாவின் நான்காம் நாளில் தனது கணவரை காண லட்சுமி தேவி குண்டிச்சா கோயிலுக்கு செல்வார். அதைத் தொடர்ந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகநாதர் கோயிலை வந்தடையும். இந்த 3 மூலவர்களுக்கும் ஆண்டுதோறும் தனித்தனியாக புதிய தேர் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஜெகநாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பாலபத்ராவுக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ராவுக்கு 43 அடி உயர தேபாதலனா ஆகிய மூன்று பிரம்மாண்டமான தேர்கள் தயாரிக்கப்ப்ட்டுள்ளது.
16 சக்கரங்களைக் கொண்ட தேரில் ஜெகநாதரும், 14 சக்கரங்களைக் கொண்ட தேரில் பாலபத்திரரும், 12 சக்கரங்களுடன் அமைந்துள்ள தேரில் சுபத்ராவும் வலம் வருவார்கள்ரத யாத்திரையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பூரியில் குவிந்து வருகின்றனர். ஒடிசா மாநிலத்தில் வெயில் வாட்டி எடுக்கும் நிலையில் அதனை போக்க ரதம் செல்லும் வழியில் தண்ணீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






