பஞ்சாப்பின் அதிரடி ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கு 246 ரன்கள் இலக்கு!

ஹைதராபாத் அணிக்கு 246 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்…

ஐபிஎல் 2025 தொடரில் இன்று (ஏப்.12) நடைபெற்று வரும் 27வது போட்டியில்  ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களும், பிரப் சிம்ரன் சிங் 42 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் தரப்பில் ஹர்சல் பட்டேல் 4 விக்கெட்டுகளும், ஈஷன் மலிங்கா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் ஹைதராபாத் அணிக்கு 246 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத் இந்த போட்டியில் வெற்றிப் பெறவில்லை என்றால் தொடர்ந்து 5வது போட்டியில் தோல்வியை தழுவும். பஞ்சாப் இதுவரை விளையாடி உள்ள 4 போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வியை தழுவி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.