மீண்டும் பற்றி எரிகிறதா பஞ்சாப்: யார் இந்த அம்ரித் பால் சிங்?

40 ஆண்டுகளுக்கு முன்பு பிந்தரன் வாலே, இப்போது அம்ரித் பால் சிங் என மீண்டும் இந்திய அரசின் உள்துறைக்கு சவால் விடுக்கிறதா பஞ்சாபின் வாரிசு என்ற அமைப்பு . மீண்டும் பற்றி எரிகிறதா பஞ்சாப்…

40 ஆண்டுகளுக்கு முன்பு பிந்தரன் வாலே, இப்போது அம்ரித் பால் சிங் என மீண்டும் இந்திய அரசின் உள்துறைக்கு சவால் விடுக்கிறதா பஞ்சாபின் வாரிசு என்ற அமைப்பு . மீண்டும் பற்றி எரிகிறதா பஞ்சாப் அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

பிரிட்டனின் லண்டன், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகங்கள் முன் திடீரென குவிந்தனர் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் ஆதரவாளர்கள். இந்திய தூதரகங்களில் பறந்து கொண்டிருந்த, இந்திய தேசியக்கொடியை அகற்றி, காலிஸ்தான் கொடியை ஏற்றினர்.

மேலும் இந்தியாவுக்கு எதிராக முழக்கமிட்டு , பஞ்சாப்பை காலிஸ்தான் என தனி நாடாக்க வேண்டும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரித் பால் சிங்- மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இந்த செய்தியை அறிந்து,வெகுண்டெழுந்த இந்தியர்கள். இந்திய தேசிய கொடியுடன் அணிவகுத்தனர். காலிஸ்தான் பிரிவினைக்கு எதிராக முழக்கமிட்டனர். பிறகு பெரிய அளவிலான இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது. முடிந்து போன காலிஸ்தான் கோரிக்கை ஏன் எழுகிறது.. வெளிநாட்டில் அம்ரித் துக்கு ஆதரவா ? என்ன நடக்கிறது பஞ்சாப் மாநிலத்தில்… யார் இந்த அம்ரித் ?

Dailyhunt

முப்பது வயதை கூட தாண்டாத , இளைஞர் அம்ரித் பால் சிங். காலிஸ்தான் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கும் பஞ்சாபின் வாரிசு என்ற அமைப்பின் தலைவர். சீக்கிய இளைஞர்களிடையே பிரபலமானவர் இவரின் உரையை சீக்கிய இளைஞர்களும்,இளம் பெண்களூம் விரும்பி கேட்கின்றனர் என தகவல்கள் வருகின்றன. அம்ரித் சிங்கின் ஆதரவாளர் ஒருவர் குற்றச்செயலுக்காக அமிர்தசரஸ் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார்.

அம்ரித் நூற்றுக்கணக்கான ஆதர்வாளர்களுடன் வாள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காவல்நிலையம் புகுந்து அங்கு வன்முறையை உருவாக்கினார்.மோதலில் காவல்துறை அதிகாரிகள் 6 பேர் காயமடைந்தனர். ஆனாலும் அம்ரித்பால் ஆதரவாளர்களின் நெருக்கடிக்கு அடிபணிந்து குற்றவாளியை விடுவித்தனர். இந்த சம்பவம் பஞ்சாப் மட்டுமின்றி நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாப்பில் காலிஸ்தான் ஆதரவு குழுக்கள் அதிகரிக்கிறது என தகவல்கள் வந்ததால், அதிக அளவில் துணை ராணுவப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடும் விமர்சனங்கள் எழுந்த பின், சுதாரித்து கொண்ட பஞ்சாப் மாநில அரசு, அம்ரித் பால்சிங்கை கைது செய்ய களம் இறங்கியது. அவரது ஆதரவாளர்கள் 78 பேரை மட்டுமே கைது செய்தது. அம்ரித் பாலை கைது செய்ய முடியவில்லை.

ஹரியானாவில் பதுங்கியுள்ள அம்ரித் பால் சிங் – வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி | News7 Tamil

ஆனால் அம்ரித் பாலோ, காவல் துறையினரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு, சினிமா பாணியில் மாறுவேடங்களில் மெர்சிடிஸ் பென்ஸ், மாருதி என பல வகையான கார்களில் இயல்பாக நகர் வலம் வந்தார். அடுத்ததாக ஜலந்தரில் குருத்வாரா உள்ளே நுழைந்து, பூஜாரி குடும்பத்தினரிடம் ஆடைகளை மிரட்டி வாங்கி மாறு வேடமிட்டார். சாலையில் ஸ்கூட்டரில் சென்றவரை மிரட்டி, ஸ்கூட்டரை பறித்து கொண்டு தன் ஆதரவாளர்களுடன் சென்று தப்பி விட்டார் அம்ரித் சிங் பால்.

அம்ரித் பால் சிங்கின் அனைத்து நடவடிக்கைகள் வீடியோ காட்சிகளில் ஆதாரமாக உள்ளது. ஆனால் 80 ஆயிரம் பேர் கொண்ட பஞ்சாப் மாநில காவல்துறை என்ன செய்கிறது என்ற நீதிமன்றத்தின் கேள்வி ? ஒவ்வொரு இந்திய குடிமகனின் கேள்வியே என்றால் மிகையில்லை…

அம்ரித் பால் சிங் பல பெண்களுடன் முறையற்ற உறவில் இருந்து, ஆபாச வீடியோக்களை காட்டி அவர்களை மிரட்டி வந்தார் என்ற தகவலும் வருகின்றன. 1980 களில் பிந்தரன் வாலே- வால் வன்முறையாட்டம் போட்ட காலிஸ்தான் கோரிக்கை, ஆபரேசன் ப்ளூஸ்டார் மூலம் முறியடிக்கப்பட்டது. மீண்டும் ஏன் காலிஸ்தான் கோரிக்கை… இப்போது அம்ரித் சிங் பால்.. இனி மீண்டும்,சில காலம் பஞ்சாப் மாநில அரசும், இந்திய அரசின் உள்துறையும், உறங்கா விழியாக செயல்பட வேண்டிய நிலை என்பதை மறுப்பதற்கில்லை

  • ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.