புது மாப்பிள்ளையாகும் புதிய முதலமைச்சர்

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மானுக்கு நாளை திருமணம் நடைபெறுகிறது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பஞ்சாபில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம்…

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மானுக்கு நாளை திருமணம் நடைபெறுகிறது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பஞ்சாபில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி  வரலாறு காணாத வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து பகவந்த் சிங் மான் அம்மாநிலத்தின் 17வது முதலமைச்சராக கடந்த மார்ச் 16ந்தேதி பதவி ஏற்றார். பஞ்சாபின் புதிய முதலமைச்சரான பகவந்த் சிங் மான் தற்போது புது மாப்பிள்ளையாக உள்ளார். ஆம்…நாளை அவருக்கும் குர்ப்ரீத் கவுர் என்கிற மருத்துவருக்கு திருமணம் நடைபெற உள்ளது.

ஏற்கனவே இந்தர் ப்ரீத் கவுருடன் பகவந்த் மானுக்கு முதல் திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே  ஏற்பட்ட மனக்கசப்பால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்றனர்.  இதையடுத்து பகவந்த் சிங் மானுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது தாய் மற்றும் சகோதரி தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். ஆனால் பஞ்சாபில் ஆம் ஆத்மியை ஆட்சிக் கட்டிலில் ஏற்ற தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பகவந்த் சிங் மான், இரண்டாது திருமணம் குறித்து சிந்திக்க நேரமில்லாமல் இருந்தார். தற்போது தனது இலக்கை வெற்றிகரமாக அடைந்து முதலமைச்சரும் ஆகிவிட்ட அவர், தாயும் சகோதரியும் சேர்ந்து தேர்வு செய்துள்ள குர்ப்ரீத் கவுரை இரண்டாது திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். 49 வயதான பகவந்த் சிங் மான்  நாளை சண்டிகரில் குர்ப்ரீத் கவுரை திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது,

சண்டிகரில் எளிமையாக நடைபெற உள்ள இந்த திருமணத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி நிர்வாகிகள் சிலரும், பகவந்த் சிங் மானின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் உள்ள பகவந்த் சிங் மானின் இரண்டு குழந்தைகளும் தனது தந்தையின் இரண்டாவது திருமணத்தைக்காண சண்டிகர் வர உள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.